மறக்க முடியுமா இந்தியாவை .. கிளிண்டன் உருக்கம்
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன், பதவியிலிருந்து விடைபெறுமுன் இந்திய பிரதமர் வாஜ்பாய் உள்பட உலகத் தலைவர்கள் 10 பேருக்குக் கடிதம்எழுதியுள்ளார்.
இதில் வாஜ்பாய்க்கு அவர் எழுதியுள்ள கடிதம் மிகவும் உருக்கமாக உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது, மறுபடியும் வாஜ்பாய்அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது ஆகியவற்றை குறிப்பிட்டு எழுதியுள்ளார் கிளிண்டன்.
கிளின்டன் அதிபர் பதவியிலிருந்து விடைபெறுமுன் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதம்:
2000 மாவது ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தேன். சரியாக இப்போது 10 மாதங்கள் ஆகின்றன. இந்தியாவில் நான் மேற்கொண்டசுற்றுப்பயணம் என்னை மிகவும் மகிழ வைத்தது. அது மறக்க முடியாத சுற்றுப்பயணம்.
இந்தியாவில் மார்ச் மாதம் மேற்கொண்ட சுற்றுப்பயணமும், வாஜ்பாய் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணமும் என்வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளாகும். இந்த இரண்டு சுற்றுப்பயணங்களும் இரு நாட்டு உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுஉண்மை.
இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும், இந்தியாவும், அமெரிக்காவும் அனைத்து விஷயங்களிலும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பது என்விருப்பமாகும்.
இந்தியாவுடன், அமெரிக்கா நல்லுறவு கொள்ள வழிவகுத்து விட்டேன் என்ற பெருமையுடன் அதிபர் பதவியிலிருந்து விடைபெறுகிறேன். இந்தியாவில்பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளை சமாளிக்கும் உங்களின் திறமையை பாராட்டுகிறேன். இதை ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன்.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் உங்களது முயற்சியையும் பாராட்டுகிறேன். தெற்காசியாவில் அமைதி ஏற்படவும், மக்களுக்கு நல்லாட்சிஅளித்திடவும் உங்களை வாழ்த்துகிறேன் என்று தனது கடிதத்தில் கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications