திரிவேணி சங்கமத்தில் நீராடினார் சோனியா
கும்ப்நகர் (அலகாபாத்):
உத்தரப்பிரதேச மாநிலம் கும்ப்நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித ஸ்தலத்தில் அகில இந்தியகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை மாலை புனித நீராடினார்.
கும்பமேளா நிகழ்ச்சிகள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இங்கு மூன்று நதிகளும் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் தீரும்என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இதனால் கும்பமேளாவில் நீராடுவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இங்கு நீராட வேண்டும் என்று அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பினார்.
24 ம் தேதி நீராட விரும்பினார். ஆனால் 24 ம் தேதி அமாவாசை தினம். எனவே பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பாதுகாப்புப்பிரச்சனைகள் எழும் என்று சோனியாகாந்தி தனது முடிவை மாற்றிக் கொண்டு ஜனவரி 22 ம் தேதி கும்பமேளாவில் நீராடத் திட்டமிட்டார்.
அலகாபாத்திலுள்ள ஆனந்தபவனுக்கு வந்தார். நேரு காலத்திலிருந்து இது காங்கிரசின் பாரம்பரிய வீடாகும். அங்கிருந்து நேரடியாக திரிவேணி சங்கமத்துக்குச்சென்றார். அங்கு பிற்பகல் 3 மணிக்கு புனித நீராடினார். பூஜைகள் செய்து, இந்து மதச் சடங்குகளின் படி சோனியா காந்தி சுமார் 10 நிமிடங்கள் பூஜைகள்செய்தார்.
பூஜைகள் முடிந்ததும் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளை சந்தித்தார். பின்னர் அலகாபாத்திலுள்ள ஸ்வராஜ் பவனுக்குச் சென்று அங்கு தங்கினார். சோனியாகாந்தி செவ்வாய்க்கிழமை காலை டெல்லி திரும்புகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications