முஸ்லீம் ஓட்டுக்களைக் குறி வைக்கிறார் ஜெ.
திருச்சி:
திருச்சியில் நடக்கவுள்ள தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டின்போது தனது தேர்தல்பிரசாரத்தைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள்முதல்வருமான ஜெயலலிதா.
இந்த மாதம் 29-ம் தேதி திருச்சியில் நடக்கும் தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டில்கலந்து கொண்டு அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்க ஜெயலலிதாமுடிவெடுத்துள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 29-ம் தேதிதிருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானமுஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம்சிறுபான்மையினர் ஓட்டுகளை கணிசமாக பெற முடியும் என ஜெயலலிதா நம்புகிறார்.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க.வும். தனது பலத்தை நிரூபிக்க விரும்புகிறது. இதற்காகஅதிகமான அ.தி.மு.க. தொண்டர்களை மாநாட்டிற்கு திரட்டும்படி மாவட்ட கட்சிநிர்வாகிகளுக்கும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணிகளை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ் மணி செய்துவருகிறார். இந்த மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொள்ள இருப்பதால் கோஷ்டிபூசல்களை மறந்து அனைத்து அ.தி.மு.க.வினரும் ஒன்றுபட்டு செயல்பட்டுவருகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று எப்படியும் மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என உறுதிபூண்டிருக்கும் ஜெயலலிதா சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் தனக்கு பெரும்உதவியாக இருக்கும் என நம்புகிறார்.
இந்திய தேசியலீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் சிறு பான்மைமக்களை கவர முடியும். அவர்கள் வாக்குகளை பெற முடியும் என்ற எண்ணத்தில் இந்தமாநாட்டில் கலந்து கொள்ள ஜெயலலிதா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் த.மா.கா. தலைவர் மூப்பனார் உள்ளிட்ட மத சார்பற்ற கூட்டணி கட்சிதலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஜெயலலிதாவை வரவேற்ற பிரம்மாண்டமான கட்அவுட்களும் வைக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications