புயல் .. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுங்கள்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில், சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று பாண்டிச்சேரிபிரிவு திமுக செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் மற்றும் திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் கூறுகையில்,
சமீபத்தில் பாண்டிச்சேரியில் கடும் புயல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள், குடும்பங்கள் குறித்து பார்வையிடுவதற்காகமத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு ஒன்று பாண்டிச்சேரி வந்து ஆய்வு நடத்தியது. புயலுக்குப் பின் 50 நாட்கள் கழித்து அக்குழு ஆய்வு மேற்கொண்டு மத்தியஅரசிடம் அறிக்கை சமர்பித்தது.
அந்தக் குழு புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், குடிசை வாழ்மக்கள் ஆகியோருக்கு விரைவில் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றுமத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications