ராஜ்குமார் ஏன் நன்றி கூற வரவில்லை?
சென்னை:
வீரப்பன் பிடியிலிருந்து மீட்கப்பட்ட பிறகு கன்னட நடிகர் ராஜ்குமார், ஏன் வந்து தமிழக முதல்வர் கருணாநிதியைச்சந்திக்கவில்லை என்று தமிழக சட்டசபையில் சூடான விவாதம் நடந்தது.
சட்டசபையில், ஆளுநர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசினர். தமிழ் மாநிலகாங்கிரஸ் உறுப்பினர் அழகிரி பேசுகையில், ராஜ்குமார் விவகாரத்தைக் கையில் எடுத்தார்.
அழகிரி பேசுகையில், கடத்தல் விவகாரத்தில், தமிழக அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்று ராஜ்குமார்நினைத்தார். அதன் காரணமாகவே அவர் முதல்வரைச் சந்தித்து நன்றி கூற வரவில்லை.
காட்டுக்குள், தமிழக அரசுக்கும், வீரப்பனுக்கும்இடையே நடந்த ரகசிய பேரத்தை நேரில் பார்த்தவர்.அதனால்தான், மனக் கசப்புற்று, தமிழகத்திற்கு வந்து முதல்வரைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்றார்.
அப்போது மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி எழுந்து, அழகிரி சொல்வது முற்றிலும் கட்டுக்கதை. அதில் சிறிதும் உண்மையில்லை.
ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டவுடன், அவரது மகன்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் நேரில் வந்துமுதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
ஆனால், உடல் நிலை காரணமாக ராஜ்குமாரால் நேரில் வர முடியவில்லை. மேலும், நன்றி சொல்வதற்காகசென்னைக்கு வந்து சிரமப் படத் தேவையில்லை என்று ராஜ்குமாரிடம், கருணாநிதியே அறிவுறுத்தினார் என்றார்வீராசாமி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications