வீரப்பன் .. தேடுதல் வேட்டையில் கேரளா போலீஸ்
பாலக்காடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கேரள காட்டில் பதுங்கியிருக்கலாம் என்று இப்போது கருதப்படுகிறது.
வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை போலீஸார் சத்யமங்கலம் காட்டில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் வீரப்பன் கேரளகாட்டில் பதுங்கியிருக்கலாம் என்று கிடைத்த தகவலையடுத்தது வீரப்பனைப் பிடிக்க கேரள போலீஸாரும் களம் இறங்கியுள்ளனர்.
இவ்வளவு வருடங்களாக வீரப்பனைப் பிடிக்கும் தேடுதல் வேட்டையில் தமிழக, கர்நாடக போலீஸாருடன் கேரள போலீஸார் சேரவில்லை.
தற்போது சத்யமங்கலம் காட்டுப்பகுதியில் கூட்டு அதிரடிப்படைப் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருவதால் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவீரப்பனும், அவரது கூட்டாளிகள் 12 பேரும் கேரள காட்டை நோக்கிச் சென்று விட்டனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிருவாணி, முத்திக்குளம், அட்டப்பாடி பகுதிகளில் கூட்டு அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைத் தேடினர். இதையடுத்து அங்கிருந்துவீரப்பன் கேரள காட்டுக்குள் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
டி.ஐ.ஜி ஹர்ஷவர்த்தனன் தலைமையில் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி காட்டில் 100 க்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள்தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இவர்கள் சிருவாணியில் முகாமிட்டுள்ளனர். இவர்களுடன் கமாண்டோ போலீஸாரும் இணைந்துள்ளனர்.
இதற்கிடையே பாலக்காடு போலீஸ் கண்காணிப்பாளர் டோமின் ஜே தச்சங்கேரி கூறுகையில், நாங்கள் வீரப்பனைப் பிடிப்பதற்கு உதவி செய்யத் தயாராகஇருக்கிறோம். சிருவாணி பகுதியில் வீரப்பன் நடமாட்டம் குறித்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இருப்பினும் வீரப்பன் கேரளாவிலுள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பிப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை. நான் வீரப்பனைப் பிடிக்கும் கேரள போலீஸ்குழுவினருடன் சேரவுள்ளேன்.
கூட்டு அதிரடிப்படை டி.ஐ.ஜி.யின் உத்தரவுப்படி கேரள போலீஸ் குழு சிருவாணியில் தேடுதல் வேட்டைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் எவ்வாறுசெயல்பட வேண்டும் என்பது குறித்து கேரள போலீஸாருக்குப் போதிய அளவு பயிற்சியில்லை. இருப்பினும் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தும் அளவுக்குஅவர்கள் பயிற்சி பெற்றவர்கள்.
மன்னார்கட் மற்றும் அகாலி காடுகளில் வன அதிகாரி ஷா நவாஸ் கேரள மாநில போலீஸாருக்கும், கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கும் காடுகள்குறித்தும், அங்குள்ள மறைவிடங்கள் குறித்தும் தகவல்கள் கொடுத்து வருகிறார்.
இருப்பினும் காடுகளில் வசிக்கும் யானைகள் மற்றும் மரங்களுக்கிடையே ஒளிந்திருக்கும் பிற மிருகங்களால் ஆபத்து வரக்கூடும் என கேரள போலீஸார்கருதுகின்றனர்.
சிருவாணி பகுதியில் மின்சார வசதி இல்லை. வயர்லெஸ் மூலம் அதிரடிப்படையினர் அவ்வப்போது கேரள போலீஸாரையும் தொடர்பு கொண்டு தகவல்கள்பரிமாறிக் கொள்கிறார்கள். கேரள போலீஸாரின் குறிக்கோளே கேரள வனப்பகுதி வழியே வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும் தப்பிக்கவிடாமல் தடுப்பதுதான் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications