ஜேக்கப்ஸ் மீண்டும் "சாதனை

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிட்லி ஜேக்கப்ஸ், புதிய உலக சாதனைக்கு வழிவகுத்துள்ளார்.

33 வயதாகும் ஜேக்கப்பஸ், சிட்னியில் செவ்வாய்க்கிழமை, ஜிம்பாப்வே அணியுடன் நடந்த ஒரு நாள்போட்டியின்போது, ஐந்து விக்கெட்டுகளை கேட்ச்கள் மூலம் வீழ்த்தினார். மேலும் ஒரு கேட்ச்சைப் பிடித்திருந்தால்அவர் உலக சாதனை படைத்திருப்பார்.

இப்போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்தது. (ஜிம்பாப்வே 138, மே.இ. தீவு 91). உலகசாதனை படைக்கும் நோக்கில் ஆறாவது விக்கெட்டை கேட்ச் செய்வதற்காக ஜேக்கப்ஸ் பாய்ந்தார். ஆயினும் அதுதவறி விட்டது. உலக சாதனையை தவற விட்ட ஜேக்கப்ஸ், தன் மூலம் புதிய சாதனைக்கு வழி வகுத்தார்.

பந்தின் மீது பாய்ந்து பிடித்ததால், ஜிம்பாப்வே அணிக்கு, கூடுதலாக 5 போனஸ் ரன்கள் கொடுக்கப்பட்டது. இந்தப்புதிய விதிமுறை கடந்தஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதுதான் முதல்முறையாக அமல் படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இப்படி போனஸ் ரன் கொடுக்கப்படுவதுஇதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் மெல்போர்ன் நகரில் நடந்த ஒரு நாள் போட்டியின்போது 7கேட்ச்சுகள் பிடித்து புதிய உலக சாதனை படைத்தவர் ஜேக்கப்ஸ். இதன் மூலம், நியூசிலாந்தின் இயான் ஸ்மித்,இங்கிலாந்தின் பாப் டெய்லரஹ், பாகிஸ்தானின் வாசிம் பேரி ஆகியோரின் உலக சாதனையுடன் சமன் செய்தார்ஜேக்கப்ஸ்.

இதுவரை, நான்கு போட்டிகளில் இதுபோல, ஐந்து கேட்ச்களைப் பிடித்துள்ளார் ஜேக்கப்ஸ்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+