கள்ளக்காதலி வீட்டில் ரவுடி சுட்டுக்கொலை
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அமீர்நகரைச் சேர்ந்த ரவுடி தனது கள்ளக் காதலி வீட்டில் பதுங்கியிருந்தபோது அவரைச் செவ்வாய்க்கிழமை போலீஸார்சுட்டுக்கொன்றார்.
சாத்தூரை அடுத்துள்ள அமீர்நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். வயது 28. இவர் பல்வேறு வழிப்பறி, கொலை, கொள்ளை வழக்குகளில்குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பல வழக்குகளில் குற்றவாளியான இவரைச் சாத்தூர் போலீஸாரும், சிவகாசி போலீஸாரும் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் கோவில்பட்டியில் உள்ள தனது கள்ளக் காதலி லட்சுமி வீட்டில் நாகராஜ் பதுங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்தது.இதையடுத்துப் போலீஸார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு லட்சுமியின் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
போலீஸார் வீட்டுக்கதவைத் தட்டியதும் நாகராஜ் வெளியே வந்தார். போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார். அதற்குள் போலீஸார்வீட்டுக்குள் புகுந்து விட்டனர். ஆத்திரமடைந்த நாகராஜ் அரிவாளை எடுத்து போலீஸாரை நோக்கி வந்தார். போலீஸாருக்கும், நாகராஜூக்கும்இடையே சண்டை ஏற்பட்டது. இதில் வெங்கட் ராமானுஜம் என்ற ஏட்டுக்குக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, எஸ்.ஐ.நாகரஜைத் தாக்க முயன்றார் நாகராஜ். ஆனால் அதற்குள் எஸ்.ஐ.செல்வராஜ், ரவுடி நாகராஜை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.நாகராஜின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
நாகராஜூக்குக் திருமணமாகி 6 மாதக் கைக்குழந்தை ஒன்று உள்ளது. அதே போல் லட்சுமிக்கும் திருமணமாகிவிட்டது. அவர் தனது கணவனைப்பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். இருவரும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications