திருச்சியில் விரைவில் மனநல மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சியில் மனநல மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி செவ்வாய்க்கிழமைசட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமிபதிலளித்துப் பேசியதாவது:

திருச்சியில் 100 படுக்கைகள் கொண்ட மனநல மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் நிதியுதவிகேட்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு இதுகுறித்து பரிசீலனை செய்ய முடியாது என்று மறுத்து விட்டது.

எனவே தமிழக அரசே மருத்துவமனையைக் கட்டுவது என திட்டமிட்டுள்ளது. கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளிலிருந்துமனநோயாளிகள் சென்னையில் உள்ள மனநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்.

தமிழக மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் சென்னையை நோக்கி வருகிறார்கள்.

இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மனநோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதால் திருச்சியில் மருத்துவமனை அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் ஆற்காடு வீராசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+