வீரப்பனின் கேசட்டைக் கொடுத்தவர் கைது
கடலூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பன் பிடியிலிருந்தபோது வீரப்பன் அனுப்பிய கேசட்டைக் கொண்டு வந்துகொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதமே கைது செய்யப்பட்ட இவரைப் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகிறார்கள். இதுதவிர நக்சலைட்டுக்கள் 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவித்த பிறகு தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படைப் போலீஸார் வீரப்பன்பதுங்கியுள்ள காட்டுப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீரப்பனுக்குத் தகவல் கொடுப்பவர்களைப் போலீஸார் ரகசியமாகக் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில்வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் முக்கியத் தூதராக செயல்பட்டு வரும் நபரைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர் பெயர் கோவிந்தராஜ். இவரைக் க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசுக்கு கடலூர் வழியாகத்தான் வீரப்பன் முதன்முதலாகக் கேசட் அனுப்பினான். இந்தக் கேசட் யார்மூலமாக வந்தது என்பது மிகவும் மர்மமாக இருந்தது. இந்த மர்மங்களுக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.கோவிந்தராஜ்தான், வீரப்பன் கொடுக்கும் கேசட்டுக்களைக் தமிழக, கர்நாடக அரசுகளுக்குக் கொண்டு வந்துகொடுத்தார் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
கோவிந்தராஜ், தமிழ்நாடு விடுதலைப்படையின் முக்கியத் தூதர். காட்டிலுள்ள வீரப்பன் மற்றும் நக்சலைட்டுக்கள்கும்பலுக்குத் தேவையான பணம், ஆயுதம் மற்றும் உணவுப்பொருட்கள் இவரது ஏற்பாட்டின்படி கைமாறியுள்ளது.
ஆனால் இவர் இதுவரை காட்டுக்குச் செல்லவில்லை என்றும், காட்டிலிருந்து வேறொருவர் மூலமாக இவருக்குஉத்தரவு வந்ததாகவும், உத்தரவை ஏற்றுக் கொண்டு அவர் செயல்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 16 ம் தேதியே கைது செய்யப்பட்ட இவரிடம் ரகசிய இடத்தில் வைத்துப் போலீஸார் விசாரணைநடத்தி வருகிறார்கள். இவரை நன்கு விசாரித்தால் வீரப்பனின் இருப்பிடம் பற்றித் தெரியவரக் கூடும் என்றும்தெரிகிறது.
மேலும் தமிழர் விடுதலைப்படை அமைப்பிலிருந்து சமீபத்தில் விலகிய ஆலப்பாக்கம் முருகேசன், வீரப்பனுடன்இணைய முயற்சித்திருக்கிறார். அவர் உள்பட 6 நக்சலைட்டுக்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications