சுற்றுலா விசா.. சலுகை தருகிறது மலேசியா

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

சிங்கப்பூர் வழியாக மலேசியா வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும் பல்நோக்கு விசா திட்டத்தைஅறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மலேசியா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலுள்ள சுற்றுலாப்பயணிகளும், அங்கு வேலை செய்து வரும் வெளிநாட்டவரும் மலேசியாவுக்கு வர விரும்பினால் அவர்கள் தனி மற்றும்பல்நோக்கு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அவர்கள் எளிதாக மலேசியாவுக்குச் செல்லலாம்.

மலேசிய குடியேற்றத்துறை பொது மேலாளர் ஆஷ் சே மேட் கூறுகையில், சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பல்நோக்கு விசா மூலம்மலேசியாவுக்கு வரலாம். அவர்கள் இரண்டு வாரங்கள் முதல் 1 மாதம் வரை இங்கு தங்கலாம். மேலும் அவர்கள் 1 மாதத்திற்கு மேல்மலேசியாவில் தங்கவும் வசதி செய்து கொடுக்கப்படும். அதாவது அவர்களுக்கு விசா நீட்டிப்புக் காலம் வழங்கப்படும்.

இந்த பல்நோக்கு விசா திட்டம் கடந்த திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இஸ்ரேல், யூகோஸ்லேவியா, செர்பியா, மான்டினிக்ரோ மற்றும்சீனாவிலிருந்து வருபவர்களுக்கு பல் நோக்கு விசாக்கள் மூலம் வர அனுமதியில்லை.

மலேசியாவில் உள்ள ஏஜன்டுகள் மூலம் அனுமதியின்றி சீனா நாட்டவர் வந்தால் அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சீனாவைச்சேர்ந்தவர்கள் மலேசியாவைக் களமாகப் பயன்படுத்திக் கொண்டு போலி தஸ்தாவேஜூகள் கொடுத்து, மேற்கத்திய நாடுகளுடன் கடத்தலில்ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் பல்நோக்கு விசாக்களைப் பயன்படுத்திக் கொண்டு மலேசியாவுக்குள் நுழைந்து விடமுடியாது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+