வீரதீரச்செயல் ... 7 பேருக்கு அண்ணா விருது
சன்னை:
வீர தீரச்செயல்களுக்காக 7 பேர் அண்ணா விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வீரதீரச்செயல்களுக்காக ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி வழங்கப்படும் இவ்விருதுக்குநாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் டி.என்.ஹரிஹரன், சுருக்கெழுத்து-தட்டச்சர் ஜி.ரங்கராமானுஜம், ஓட்டுனர் எஸ்.அந்தோணி ஜேம்ஸ், அலுவலகஉதவியாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் அலுவலரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்த அரசுப்பணம் ரூ.7 லட்சத்தை பறித்துச்சென்றகொள்ளையர்களை பிடித்ததுடன் அவர்களிடமிருந்த அரசுப்பணத்தையும் மீட்டனர்.
அமராவதி ஆற்றுச்சுழலில் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்த மாணவர் மணிகண்டனை காப்பாற்றியதற்காக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சி.சிவராமன்இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் வட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணவி பழனி நீச்சல் தெரியாவிட்டாலும் கிணற்றில் தவறி விழுந்த தனது தங்கையை காப்பாற்ற கிணற்றில்குதித்து தங்கையை மூழ்க விடாமல் பிடித்துக் கொண்டு குரல் கொடுத்ததால் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றினர். இதற்காகஇம்மாணவிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது.
பவானி சாகர் அணை பூங்கா குளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த 2 வயதுக் குழந்தையை காப்பாற்றியதற்காக சத்தியமங்கலம் வட்டம், வரதம்பாளையைச்சேர்ந்த விமல் ராஜ்குமார் அண்ணா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications