பிப். 19 ல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19 ம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபின் இதுகுறித்து அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில் பிப்ரவரி 19 ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் ஆரம்பமாகும். பிப்ரவரி 28 ம் தேதி மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 2001 - 2002 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல்செய்வார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான பிப்ரவரி 19 ம் தேதி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும்உரையாற்றுவார்.
பிப்ரவரி 28 ம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகியிடம்கேட்டிருக்கிறேன். அவர் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதே நாள் பிற்பகல் 2 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கூட்டத்தொடரில் தனியார் மசோதாக்கள் கொண்டு வரப்படும். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கூட்டத்தொடர் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் மாதம் 23 ம் தேதி வரையிலும், இரண்டாவது கூட்டத்தொடர் ஏப்ரல் 16 ம் தேதி தொடங்கி மேமாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார் பிரமோத் மகாஜன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications