எனக்கு பதவி ஆசையில்லை... இளங்கோவன்
சென்னை:
தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது எனது ஆசையில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் புதன்கிழமைதெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து கோஷ்டிப்பூசல் ஏற்பட்டு வருகிறது. கட்சித் தலைவர் இளங்கோவன் மேல் கட்சியிலுள்ள பிற தலைவர்களுக்குதிருப்தியில்லை. இதையடுத்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு சமீபத்தில் பொங்கல் விருந்து அளித்தார். அதில் இளங்கோவன் எதிர்ப்பாளர்கள்கலந்து கொண்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலுள்ள கோஷ்டிப்பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகர்புதன்கிழமை பொங்கல் விருந்து நடத்தினார்.
பொங்கல் விருந்து சென்னை தியாகராயர் நகரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
விருந்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கருத்துவேறுபாடுகளை மறந்து கலந்து கொண்டனர். விருந்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியதாவது:
நான் 100 க்கு 100 க்கு நேர்மையானவன் இல்லை. என் மீது உள்ள குறைகளை சுட்டிக் காட்டுங்கள். அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராகஇருக்கிறேன். சில தலைவர்கள் என் மீது கோபத்தோடு இருக்கலாம். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் அனைவரும்ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. தலைவர் ஆனதிலிருந்து எனது சுதந்திரம் பறிபோய்விட்டது.அதனால் மனச்சோர்வு அடைந்து விட்டேன். நம் கட்சிக்குள் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. நாம் பூசல்களை மறந்து விட்டு ஒன்றுபட்டு இருக்கவேண்டும். காங்கிரஸ் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிருபித்துக் காட்ட வேண்டும் என்றார் இளங்கோவன்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications