அமெரிக்க விருது பெறும் கோவை டாக்டர்
கோவை:
அமெரிக்காவின் வீடியோ நூலகர் விருது வெற்ற கோவை டாக்டருக்கு இந்த ஆண்டும் அதே விருதுகிடைத்துள்ளது. இத்தகைய நூலகர் விருது பெற்ற முதல் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களின் சாதனைகளைப் பாராட்டி அமெரிக்கா,விடியோ நூலகர் விருது வழங்குகிறது. இந்த விருது பெறுவோரின் அறுவை சிகிச்சை முறைகள் விடியோ படமாகபாடத்திட்டத்தில் அமெரிக்காவின் மருத்துவக் கழகம் சேர்க்கும்.
வழக்கமாக இத்தகைய அறுவை சிகிச்சைகளின் படத்தை உலகம் முழுவதும் தேர்வு செய்யப்படும். இதில் 12அறுவை சிகிச்சை முறைகள் தேர்வு செய்யப்பட்டு இதில் இடம் பெறும். இத்தகைய தேர்வில் கோவையில் உள்ளடாக்டர் பழனிவேலுவின் அறுவை சிகிச்சை முறைகள் இரண்டு இடம் பெற்றுள்ளன.
கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பழனிவேலு, குடல்நோய் மற்றும் பித்தப்பைதொடர்பான அறுவை சிகிச்சையில் சர்வதேச அளவில் பெயர் வென்றுள்ளார். சர்வதேச அளவில் இவர் இதுவரை65 மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். கடந்த 1998ம் ஆண்டு ரோம் நகரில் இவரதுகட்டுரைகளின் தொகுப்பு சிறந்ததாகப் பாராட்டுப் பெற்றது. இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள பத்துமருத்துவர்களில் ஒருவராக டாக்டர் பழனிவேலுவும் தேர்வு பெற்றுள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு அமெரிக்காவின் மருத்துவக் கழகம் தேர்வு செய்த 12 வீடியோ தொகுப்புகளில் டாக்டர்பழனிவேலுவின் அறுவை சிகிச்சை விடியோ படம் இடம் பெற்றது. இந்த படத்திற்காக 2000ம் ஆண்டு அமரிக்கநூலகர் விருது கிடைத்தது. இதே போன்று 2000ம் ஆண்டில் நடந்த தேர்வில், இவருடைய இரண்டு விடியோஅறுவை சிகிச்சைத் தொகுப்பும் இடம் பெற்றது. இதற்கான நூலகர் விருது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்அமெரிக்காவில் நடக்கும்விழாவில் இவருக்கு வழங்கப்படுகிறது.
டாக்டர் பழனிவேலு, வயிற்றை கிழித்து நடத்தப்படும் மருத்துவ சிகிச்சையை லேபாராஸ்கோபிக் சிகிச்சைஎனப்படும் வயிற்றில் துளையிட்டு செய்யப்படும் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.பித்தநாளா வீக்கம், கணையத்தில் கல் அகற்றுதல் ஆகிய அறுவை சிகிச்சையை இந்த வீடியோ தொகுப்பில்அளித்துள்ளார்.
கொழுப்புச் சத்து செரிமானத்திற்கு பித்த நீர் அவசியம். இந்த பித்த நீர் கல்லீரலில் சுரக்கிறது. 3 மிமீ அளவே உள்ளநாளத்தின் வழியாக குடலுக்குச் செல்லும். இத்தகைய பித்த நீர் சில நேரங்களில் நாளம் பலவீனப்படும்போதுதேக்கம் ஏற்படுகிறது. இதனால் பித்த நாளம் 100மி.மீ அளவிற்கு வீக்கம் ஏற்பட்டு விடுகிறது.
இதனால் குளிர்காய்ச்சல், வயிற்றுவலி, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இந்த வீக்கத்தை அகற்ற வயிற்றை கிழித்துஆபரேஷன் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வீக்கத்தில் தேங்கியுள்ள தொற்று நீர், மற்ற இடங்களில் பரவுகிறது.எனவே, ஆபரேஷன் செய்யப்பட்ட காயம் குணமடைய அதிக நிாட்கள் ஆகின்றன. ஆனால் இதனைலேப்ராஸ்கோபிக் சிகிச்சையில்மேற்கொள்ளப்படும்போது மிக நுட்பமான றையில் செய்ய டியும்.
இதேபோன்று கணைய நீர் அடைப்பு ஏற்பட்டு சிறுகுடலுக்கு இந்த நீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால்வலி ஏற்படும். இதனையும் லேப்ராஸ்கோப் சிகிச்சையினால் சரி செய்ய முடியும் என்பதை படமாக டாக்டர்பழனிவேலு அளித்துள்ளார்.
இதே போன்று புற்றுநோய், மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களுக்கும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சையைப்பயன்படுத்தி டாக்டர் பழனிவேலு வெற்றி கண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications