டாக்டர் குடும்பத்துக்கு ரூ 16 லட்சம் நஷ்டஈடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் 1995 ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்த மருத்துவக்கல்லூரி டாக்டரின் குடும்பத்தினருக்கு ரூ 16 லட்சம் நஷ்டம் வழங்க சென்னைஉயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை மருத்துவக்கல்லூரியில் வேலை செய்து வந்தவர் டாக்டர் ஆதிமூலம். இவர் 1995 ம் ஆண்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத்திரும்பிக் கொண்டிருந்தபோது லாரி மோதி இறந்தார்.

இதையடுத்து இவரது குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இவரது குடும்பத்தார், யுனைடட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி மற்றும்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவர்கள் வாகன விபத்துத் தடுப்புச் சட்டத்தின்படி ரூ 25 லட்சம் நஷ்டஈடு தரக்கோரி கோரிக்கை விடுத்திருந்தனர். அப்போது இவரது குடும்பத்துக்கு ரூ 10.8லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கு வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யசிவம்,தங்கவேல் ஆகியோர் தங்களது தீர்ப்பில் கூறுகையில், டாக்டர் ஆதிமூலம் உயிருடன் இருந்திருந்தால் அவர் மாதம் ரூ 10,000 என்ற கணக்கில்சம்பாதித்துக் கொண்டிருப்பார். மேலும் அவர் மருத்துவத்துறையில் 13 வருடங்கள் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் விபத்து நடந்த போது அவரது மேல் எந்தத் தவறும் இல்லை. சாலைவிதிகளைப் பின்பற்றாத லாரி டிரைவர் மேல்தான் தவறு இருக்கிறது.இதனால் விபத்தில் இறந்த டாக்டர் ஆதிமூலத்துக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையாக ரூ 16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தங்களதுஉத்தரவில் கூறியுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+