பார்த்தசாரதி கோயிலில் ஜெ., சசி பூஜை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் சென்னை பார்த்தசாரதி கோயிலில்புதன்கிழமை வழிபாடு நடத்தினர்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. ஜெயலலிதாவும், அவரது தோழியும் பல கோயில்களில்சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டங்களில் இருக்கும் பல கோவில்களுக்கு சென்றுவழிபாடு நடத்தினர்.

ஹைதராபாத்திலும் வழிபாடு நடத்தினர். அப்போது ஜெயலலிதாவுக்காக பூஜை செய்த சுதாகரன் புலியைக்கொன்று புலி ரத்தம் எடுத்துச் சென்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்தும் தற்போது விசாரணை நடந்துவருகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் இளங்காளியம்மன் கோவிலும் பூஜை செய்தார் ஜெயலலிதா. இந்தபூஜைகளைத் தொடர்ந்து புதன்கிழமை சென்னை பார்த்தசாரதி கோயிலுக்கு தன் தோழியுடன் சென்று வழிபாடுசெய்தார் ஜெயலலிதா.

திடீரென்று ஜெயலலிதாவும், அவரது தோழியும் புதன்கிழமை பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றனர். இவர்கள்இருவரும் கோயிலின் சுவாமி சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்நடத்தப்பட்டன.

தாங்கள் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றிருந்த தேங்காய் பழங்களை வைத்து பூஜை செய்தனர். அதன் பின்புகோயிலை இருவரும் வலம் வந்தனர். மதியம் 1 மணிக்கு கோயிலிலிருந்து கிளம்பிச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+