பா.ஜ.க.62 தொகுதிகளில் வெற்றி பெறும்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என கட்சியின் தமிழகப் பிரிவுத்தலைவர் கிருபாநிதி வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது.தேர்தலில் 62 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து பின்னர்தெரிவிப்போம்.
தமிழகத்தில் அமையவுள்ள மூன்றாவது அணியால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடுத்தகூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும்.
தொகுதிப்பங்கீடு குறித்து தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி முடிவு செய்வார். அவரது முடிவுகளை பா.ஜ.க. ஏற்கும். வரும் தேர்தலில்மூன்றாவது அணி வெற்றி பெறுவதற்கு சாத்தியமேயில்லை.
சோ ராமசாமியும், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் சமீபத்தில் சந்தித்துப் பேசினார்கள். அது அவர்களது விவகாரம். அதுகுறித்து நான் ஒன்றும்கூறுவதற்கில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும், பா.ம.க.வும், த.ரா.கா.கட்சியும் அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றன. இருகட்சிகளும் அவர்களுடைய பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு பாரதிய ஜனதாக் கட்சியால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications