அ.தி.மு.க வை ஆதரித்தால் அபாயம்... அன்பழகன்
சென்னை:
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் முயற்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்பட்டு வருவது, லஞ்ச ஊழலைஊக்குவிப்பது மட்டுமன்றி தமிழக மக்களையே படுகுழியில் தள்ளுவது போன்ற அபாயகரமான செயலாகும் என்று கல்வி அமைச்சர் அன்பழகன்சட்டசபையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சட்டசபையில் வியாழக்கிழமை கல்வி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமின்றி, கட்சியில் இருந்த மாஜி எம்.எல்.ஏ.க்கள் பலர் இன்று கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாகஅலைந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது அனைவர் பெயரிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அ.தி.மு.க.வுக்கு வெளிப்படையாகவே தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த முறைஅ.தி.மு.க.வையே ஆட்சிபீடத்தில் ஏற்ற வேண்டும் என்பதையே தனது குறிக்கோளகக் கொண்டு செயல்படுகிறது த.மா.கா.
த.மா.கா. ஆட்சியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது. தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு த.மா.கா. முடிவெடுக்க வேண்டும். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்து விட்டு பின்னால்வருத்தப்படக் கூடாது. ஊழல் மிகுந்த கட்சியை ஆட்சியில் அமர வைக்கக த.மா.கா.முயலக் கூடாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு த.மா.கா.கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 1996 ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்கு வந்தபிறகு ஊழலில்லாத ஆட்சியை கொடுத்து வருகிறது. இன்று மட்டுமல்ல எப்போதும் தி.மு.க.ஊழலைஎதிர்த்துக் குரல் கொடுக்கும் என்றார் அன்பழகன்.
யு.என்.ஐ.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications