வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்
பாண்டிச்சேரி:
தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க தயாராக இருந்தால் தான் மீண்டும்வீரப்பனிடம் தூதுவராக செல்ல தயாராக இருப்பதாக தமிழ் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன்தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வீரப்பன் விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையல்ல. இந்த பிரச்சனை சமூக- பொருளாதார கண்ணோட்டத்தில்பார்க்கப்பட வேண்டும்.
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வாழும் மலைசாதியினரும், ஏழை கிராம மக்களும் கடந்த 8 ஆண்டுகளாககஷ்டப்பட்டு வருகிறார்கள். இதுவரை வீரப்பனை பிடிக்க ரூ 170 கோடிவரை செலவிடப்பட்டுள்ளது.அதிரடிப்படையின் நடவடிக்கை தொடர்ந்து வருவதால் மேலும் பணம் செலவாகி வருகிறது.
சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கியது போல் வீரப்பனுக்கும் பொது மன்னிப்புவழங்க வேண்டும்.
தமிழக, கர்நாடக அரசுகள் இது குறித்து பரிசீலிக்குமானால் வீரப்பனை சந்தித்து சரணடைய வைக்க முயற்சிகள்மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.ஆனால் இது அனைத்தும் உடனடியாக நடக்கக்கூடியது அல்ல.
மக்கள் மத்தியிலும் வீரப்பனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணம் நிலவி வருகிறது.
தற்போது நடந்து வரும் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.குறைந்சபட்சம் பத்திரிக்கையாளர்களாவாது அந்த பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
அதிரடிப்படையினரின் நடவடிக்கையால் அந்த பகுதியில் வாழும் மலைசாதியினர் தங்கள் தினசரி வாழக்கைக்காகபணம் சம்பாதிக்கக்கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். அதிரடிப்படையின் நடவடிக்கை முடியும் வரை அரசுஅவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும். இது பட்டினிச்சாவுகளை தடுக்க உதவும்.
அதிரடி படையினரால் நடந்த முறைகேடுகள் குறித்து தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications