குஜராத்தில் அத்வானி
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தனி விமானம் மூலம்டெல்லியிலிருந்து பிற்பகல் குஜராத் சென்றார்.
குஜராத் சென்ற அவர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிடுவார்.
அத்வானி கடும் அதிர்ச்சி:
குடியரசு தினமான வெள்ளிக்கிழமை குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கடும் அதிர்ச்சி தெரிவித்தார்.ஏறத்தாழ 500 மக்களைக் கொன்ற நிலநடுக்கத்தின் அபாயம் குறித்து ஜீரணிக்க முடியவில்லை என்றார்.
அகமதாபாத் செல்லுமுன் அவர் டெல்லியிலிருந்து, குஜராத் முதல்வர் கேசவ்பாய் படேலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலநடுக்க நிலவரம்குறித்துத் தெரிந்து கொண்டார்.
முன்னதாக குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில்இடிந்து கிடந்த கட்டிடங்களும், இறந்து கிடந்த சடலங்களுமாக மிகவும் கொடூரமாகக் காட்சியளித்தது.
மாநிலத்தில் ஜாம்நகர், சூரத், ராஜ்காட், அகமதாபாத், காந்திநகர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 30 வினாடிகள் ஏற்பட்டநிலநடுக்கத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டது.
சிறப்பு விமானம்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு லேசான காயமடைந்த நிலையில் தவித்து வரும் மக்களை அங்கிருந்து டெல்லிக்குக்கொண்டு வருவதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானத்தை வெள்ளிக்கிழமை மாலை முதல் இயக்கவுள்ளது.
இந்த விமானம் 3 மணி நேரங்களுக்கு ஒரு முறை குஜராத் மாநிலம் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும். விமானம் மாலை 6 மணி முதல்குஜராத் செல்லும்.
தயார் நிலையில் ராணுவம்:
குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், நாலியா, பகுஜ், ஜாம்நகரில் மீட்புப்பணிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். குஜராத்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் தெரிவிக்கும் செய்திகளுக்கேற்றவாறு நாங்கள் மீட்புப்பணிகளை முடுக்கி விடுவோம். அவர்கள் கூறும் இடங்களுக்கு உடனடியாக சென்றுநிவாரணப்பணிகளை மேற்கொள்வோம் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications