தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம்
டெல்லி:
இந்தியாவின் 52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நிலடுக்கம்ஏற்பட்டது.
குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்பட தென் மற்றும் மேற்கிந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் காலை 8.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது இம்மாநிலத்தில் இந்தியா -பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கட்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது. தலைநகர் காந்திநகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பல வீடுகள்சரிந்து விழுந்தன. இதனால் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.ஆனால் நிலநடுக்கத்தால் குஜராத் மாநிலத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அகமதாபாத்திலுள்ள யூ.என்.ஐ. செய்தி நிறுவனம் இயங்கி வரும் கட்டிடத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம்ஒன்றில் நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளத்திலும்நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத் தவிர, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு,பாண்டிச்சேரியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோவா தலைநகர் பனாஜியில் காலை 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏற்பட்டது. நிலநடுக்கம்6.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
மும்பையில் நிலநடுக்கம்:
மும்பையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து விவரங்கள் எதுவும் உடனடியாகத்தெரியவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலிருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓட ஆரம்பித்தனர்.இதனால் வீடுகளிலிருந்த பீரோ, கட்டில்கள், மரச்சாமான்கள் ஆகியவை கீழே உருண்டு விழுந்தன. மேலும் வீட்டுக்கதவுகள், ஜன்னல்கள் நொறுங்கின.
மும்பையில் காலை 8.45 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை.இந்தியாவின் 52 வது குடியரசுதினமான வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கவர்னர் அலெக்சாண்டர் முன்னிலையில் குடியரசு தின விழா நடந்து கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக குடியரசு தின விழா அணிவகுப்பு நடந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரியஅளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications