தலைநகரில் குடியரசு தின கோலாகலம்
டெல்லி:
இந்தியாவின் பாரம்பரியத்தையும், திறமையையும் பறைசாற்றும் விதமாக இரண்டு மணி நேர குடியரசு தினம் கோலாகலமாக தலைநகரில் நடந்தேறியது.
சுமார் 65 ஆயிரம் பாதுகாவலர்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை 10 மணிக்குத் துவங்கிய முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், முன்னதாக 21 குண்டுகள் முழங்கவரவேற்கப்பட்டார்.
சிறப்பு விருந்தினர்:
அல்ஜீரீய அதிபர் அப்தேல் அஜீஸ் பூட்ஃபிலிகா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதன்முறையாக ஒரு அரபு நாட்டு அதிபருக்கு இச்சிறப்புஅளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரதமர் வாஜ்பாய், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், அல்ஜீரீய அதிபர் உள்பட இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களை பாதுகாப்புஅமைச்சர், மற்றும் முப்படைத் தலைவர்கள் வரவேற்றனர்.
டெல்லி பிரதேச ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் வினோத் பானோ தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீரச்செயல்களுக்கான விருது பெற்ற குழந்தைகள் யானையின் மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மிரட்டலையும், கடும்பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டுகலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் குடியரசு தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
காஷ்மீரில் குடியரசு தினவிழா:
காஷ்மீரில் கடும் பாதுகாப்புக்கிடையே நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆளுநர் ஜி.சி.சக்சேனா,கொடியேற்றி வைத்தார். முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ..
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆளுநர் பாத்திமா பீவி, கொடியேற்றி வைத்தார். முதல்வர்கருணாநிதி இவ்விழாவில் அண்ணா விருது மற்றும் வீரதீரச்செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications