3 வது அணியில் இணைகிறது எஸ்.டி.எஸ் கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரத்தின் புரட்சித் தலைவர் அ.தி.மு.க. கட்சி ஏ.சி. சண்முகத்தின் தமிழகஜனநாயக கூட்டணியில் இணையவிருக்கிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. , அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க புதிய நீதிக் கட்சியின்தலைவர் சண்முகம் முயற்சி செய்துவருகிறார்.
இதன்படி தமிழக ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணியை உருவாக்கினார். அதில் முன்னாள்அமைச்சர் கண்ணப்பனின் தமிழ் தேசம் கட்சி இணைந்துள்ளது.
சண்முகம் எஸ்.டி. சோமசுந்தரத்தை சந்தித்து மூன்றாவது அணியில் இணையுமாறு கேட்டுக் கொண்டார். இதைஏற்றுக் கொண்ட எஸ்.டி. சோமசுந்தரம் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இந்த மாதம் 29-ம் தேதிஅறிவிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications