மூப்பனார் தலைமையில் தமிழக ஜனநாயகக் கட்சி?
சேலம்:
தமிழக ஜனநாயகக் கட்சிக்கு மூப்பனார் தலைமை வகிப்பார் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
சேலத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முதல் கட்டமாக நாங்கள் 3 வது அணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியில் முதலில் கொங்கு நாடு மக்கள்கட்சி, தாயக மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. 2 வது கட்டமாக த.மா.கா தலைவர் மூப்பனாரைத்தலைமை தாங்க அழைப்பு விடுத்துள்ளேன்.
முதல் முறையாக அவரைச் சந்தித்தபோது ஆதரவளிப்பதாக ஒப்புக் கொண்டார். அவர் 75 சதவீதம் எங்கள்அணிக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது குறித்து மற்ற கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைசெய்து விட்டு முடிவு எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவரது பதில் எனக்குத் திருப்திகரமாக இருந்தது. இதையடுத்து நாங்கள் 3வது அணி அமைக்கும் முயற்சியில்தீவிரமாக ஈடுபட்டுள்ளளோம். 3 வது அணியின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். இந்தஅணி ஏற்பட்டவுடன் இந்த தலைமைப் பொறுப்பை மூப்பனாரிடம் அளிப்பேன்.
மக்கள் தமிழ்தேசத்தின் கட்சி அலுவலகத்தில் கண்ணப்பனைச் சந்தித்துப்பேசினேன். அவரும் எங்களுடன் அணிசேருவார் என நம்புகிறேன். அவர் இந்த அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவர் அ.தி.மு.கதலைவர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறேன்.
தேர்தலுக்குப் பிறகு சாதிக் கட்சிகள் காணமல் போய்விடும் என அ.தி.மு.க, பொதுச் செயலர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு காணமல் போவது ஜாதிக் கட்சிகளா அல்லது பிரதான அரசியல் கட்சிகளாஎன்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும்.
தமிழக ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் மூப்பனாரை முதல்வராக்குவோம். அவர் எப்போது எங்கள்அணிக்கு வந்தாலும், நாங்கள் அவருக்கு தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். புதியநீதிக் கட்சி தமிழகத்தில் இன்னும் 30 தொகுதிகளில் மாநாடு நடத்தவுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 25ம் தேதிசென்னையில் மாநாடு நடத்துவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications