மீண்டும் நடுங்கியது பூஜ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் 26-ம் தேதி பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பூஜ் மாவட்டத்தில் திங்கள்கிழமை மீண்டும்நிலநடுக்கம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் சிறுஅளவிலான நில அதிர்ச்சிகள் இருந்தன.
இந்த நில அதிர்ச்சிகளின் அளவு 3.5 முதல் 4.6 ரிக்டர் அளவாக இருந்தன. பூஜ் பகுதியில் திங்கள்கிழமை காலை 8மணிக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.
26-ம் தேதிக்குப் பிறகு இதுவரை பூஜ் பகுதி, 88 நில அதிர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 5.9 ரிக்டர்அளவில் நில நடுக்கம் இருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications