கண்ணீர் கடலில் பூஜ்-சாவு 20,000
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் மாவட்டத்தில் மட்டும் பூகம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20, 000 ஐ தாண்டும் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவர்கள் குழு ஒன்று பூஜ் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் தெரிவித்ததுபடி, இடிபாடுகளுக்கிடையில் 50,000பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை என்று தெரிகிறது.
பூஜ் மாவட்டத்தில் மட்டும் சாவு எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டும் என்று தெரிகிறது. பூஜ் மாவட்டம் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி அழிந்ததுபோல் முழுவதுமாக அழிந்து விட்டது. பூஜ் மாவட்டத்தில் பாதிக்கப்படாத பகுதி ஒன்று கூட இல்லை.
பூஜ் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. டாக்டர்கள் அனைவரும்உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் காயமடைந்த நிலையில் வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராம் மனோகர் மருத்துவமனை, அகில இந்திய மருத்துவக்கழக மருத்துவமனைகளில் சடலங்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மருத்துவமனைகளிலிருந்தும் டாக்டர்கள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ளன. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications