35 வைர ஊழியர்கள் சாவு
அகமதாபாத்:
அகமதாபாத் பாபுநகரிலுள்ள வைர நகைகள் செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 35 பேர் பூம்பத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து வைர நகை தொழிற்சாலையில் வேலை செய்யும் பரத்சிங் ராஜ்புத் கூறுகையில், எங்கள் தொழிற்சாலை எப்போதும் பூட்டியே இருக்கும். வேலைசெய்யும் இடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதற்காக தொழிற்சாலை உரிமையாளர், ஊழியர்கள் வேலைக்கு வந்ததும் கதவைப் பூட்டி விடுவார்.
கடந்த வெள்ளிக்கிழமையும் இதே போல் ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு வந்ததும் தொழிற்சாலை பூட்டப்பட்டது. அப்போது காலை 8.26மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த ஊழியர்கள் அனைவரும் கதவைத் திறக்குமாறு கூச்சல் போட்டுக் கத்தினர். ஆனால்யாரும் கதவைத் திறக்கவில்லை.
இதையடுத்து வைர நகைத் தொழிற்சாலை உள்ள 3 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 35 வைர நகை ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது.
ஜனவரி 26 ம் தேதி பொதுவிடுமுறை தினமாக இருந்தபோதிலும், எங்கள் தொழிற்சாலையில் 300 பேர் வேலைக்கு வந்திருந்தார்கள். வழக்கம்போல் தொழிற்சாலை பாதுகாவலர் கதவை வெளிப்புறமாகப் பூட்டி விட்டார். அப்போதுதான் பூகம்பம் ஏற்பட்டது. காயமடைந்த எனது சக ஊழியர்கள்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழிற்சாலையின் கீழ்தளத்தில் வேலை செய்து வந்த வைர நகை ஊழியர்கள் அங்குள்ள இன்னொரு பாதை வழியாக வெளியேறி தப்பித்து விட்டனர். பூகம்பம்ஏற்பட்ட போது நானும் எனது சக ஊழியர்கள் சிலரும் மூன்றாவது மாடியில் இருந்தோம். ஒவ்வொருவராக ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்துத்தப்பித்து விட்டோம்.
மேலும் பெண் ஊழியர்கள் உடுத்தியிருந்த புடவைகளை கயிறு போல் கட்டி அதன் மூலம் கட்டிடத்திலிருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கப்பட்டனர்.நாங்கள் புடவைகள் கொடுத்து உதவிய பெண்களை முதலில் மேலிருந்து கீழே இறக்கி விட்டோம். அவர்கள்தான் எங்களுக்கு மறுவாழ்வுகொடுத்தவர்கள்.
மூன்றாவது மாடியிலிருந்து கயிறு போல் கட்டித் தொங்கவிடப்பட்ட புடவை மூலம் தப்பித்த சுரேஷ் என்பவர் காயமடைந்துள்ளார். அவர் இன்னும்மயக்கமடைந்த நிலையில் உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அகமதாபாத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு வைர நகைகள் செய்யப்படுகின்றன. தினமும் எங்கள் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள்வேலை செய்வார்கள். பூகம்பம் நடந்த தினம் குடியரசு தினமாதலால் சொற்ப ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். விடுமுறை அல்லாத நாளில் இந்தச்சம்பவம் நடந்திருந்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications