வயது 76: குழந்தைகள் 69: மனைவிகள் 7: தேவை .. இன்னும் ஒரு மனைவி
கெய்ரோ:
எகிப்தைச் சேர்ந்த 76 வயது தாத்தா, 8-வது முறையாக இளம் பெண்ணை திருமணம்செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். கெய்ரோவில் வசிக்கும் தாத்தாவுக்கு 76 வயதில்ஆசை வந்திருக்கிறது.
69 குழந்தைகளுக்கு தந்தையான குதார் ஹக்கீம் என்ற 76 வயது தாத்தாவுக்குதான் இந்தஆசை வந்திருக்கிறது. அதிகம் எதையும் எதிர்பார்க்கவில்லை அழகிய 20 வயது பெண்இருந்தால் போதுமானது என்கிறார் இந்தக் குசும்புத் தாத்தா.
ஹக்கீம் ஏற்கனவே 7 முறை திருமணம் செய்து கொண்டவர். 76 வயதில் எட்டாவதாக20 வயது பெண் வேண்டும் என்கிறார் அவர்.
தன்னுடைய மனைவிகளுடனும், குழந்தை,பேரக் குழந்தைகளுடன் சகாராவில்இருக்கும் பாலைவன சோலையில் உல்லாச வாழக்கை வாழ வேண்டும் என விருப்பம்தெரிவித்திருக்கிறார். புதிதாகத் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்,குந்தைகளை விரும்புபவளாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தன் குடும்பம் பற்றி ஹக்கீம் பெருமையாக கூறியதாவது:
என் முதல் மனைவி மூலம் எனக்கு 16 குழந்தைகள் பிறந்தன. என் இரண்டாவதுமனைவி மூலம் எனக்கு 18 குழந்தைகள் பிறந்தன. என் மற்ற 5 மனைவிகள் மூலம்எனக்கு 35 குழந்தைகள் பிறந்தன. இதில் ஆண் குழந்தைகள் 41 பேரும், பெண்குழந்தைகள் 28 பேருமாவர்.
என் வாரிசுகள் அனைவரிடமும் எனக்கு நல்ல உறவு உள்ளது. எனக்கு அவர்கள்அனைவரின் பெயரும் தெரியும். நான் அவர்களிடம் எந்த விதமான பாகுபாடும்காட்டுவதில்லை என தெரிவித்தார்.
பேரிச்சம்பழம், பிரெட் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறார். எப்போதாவதுமாட்டிறைச்சியும், ஆட்டிறைச்சியும் சாப்பிடுகிறார். அதிக அளவு பாலும் தினமும்அருந்துகிறார். தினமும் வாக்கிங்கும் உண்டு.
ஏன் மீண்டும் ஒரு மனைவி வேண்டும் என்று ஹக்கீமைக் கேட்டபோது, என் 3மனைவிகளும் இறந்து விட்டனர். இரண்டு மனைவிகளை விவாரத்து செய்து விட்டேன்.இரண்டு மனைவிகளை விட்டு பிரிந்து விட்டேன். எனவே எனக்கு இளம் மனைவிஇப்போது தேவை என்கிறார்.
தனது வாரிசுகள் யாரும் தன்னை பின்பற்றவில்லை என ஹக்கீம் வருத்தப்படுகிறார்.அவர்கள் அனைவரும் சேர்ந்து தனக்கு 77 பேரக் குழந்தைகளை மட்டுமே (?)கொடுத்துள்ளதாக அவர் வருந்துகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications