ஜாதிக் கூட்டணியில் இணைந்தது எஸ்.டி.எஸ். கட்சி
சென்னை:
புதிய நீதிக்கட்சியால் தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது அணியான தமிழ் நாடுஜனநாயக கூட்டணியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வும் இணைந்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கும்முயற்சியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தீவிரமாக முயன்றுவருகிறார். அவர் தமிழ் நாடு ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் மூன்றாவதுஅணியை தொடங்கினார்.
இந்த கூட்டணியில் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி முன்னரேஇணைந்துள்ளது. இந்நிலையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வும் இந்தகூட்டணியில் இணைந்துள்து.
தமிழ் நாடு ஜனநாயக கூட்டணியில் இணைவதாக நிருபர்களிடம் புதிய ஏ.சி.சண்முகம்அறிவித்தார். அப்போது புரட்சி தலைவர் அ.தி.மு.க. தலைவர் ராஜாராம், பொதுச்செயலாளர் எஸ்.டி. சோமசுந்தரம் உள்ளிட்ட கட்சியின் பல தலைவர்கள்உடனிருந்தனர்.
த.மா.கா. தலைவர் மூப்பனாரை மூன்றாவது அணிக்கு வருமாறு சண்முகம்அழைத்துள்ளார். இது குறித்து அவர் மூப்பனாரிடம் முதல் கட்ட பேச்சு வார்த்தையும்நடத்தியுள்ளார். ஆனால் மூப்பனார் இது தொடர்பாக எந்த முடிவும்தெரிவிக்கவில்லை.
தமிழக ஜனநாயக கூட்டணியில் தற்போது 3 சிறிய கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 2ஜாதிக் கட்சிகள் (புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசக் கட்சி) என்பதுகுறிப்பிடத்தக்கது.
பின்னர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், விரைவில் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசை மூன்றாவது அணியில் சேர்ப்பதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறேன். அவரது அனுமதிக்காககாத்திருக்கிறேன்.
தமிழ் நாடு ஜனநாயக முன்னணி அ.தி.மு.க. தலைமையிலான மதசார்பற்றகூட்டணியுடன் கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் தமிழ் நாடு ஜனநாயககூட்டணிதான் அடுத்த ஆட்சியை அமைக்க போகிறது. அ.தி.மு.க.வுடன் எந்தவிதமான கூட்டணியும் அமைக்க மாட்டோம் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications