For Quick Alerts
For Daily Alerts
Just In
கை, கால்களைக் கட்டிக் கொண்டு 2 கி.மீ. நீச்சல்
ஜார்ஜியா:
கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஜியார்ஜியா பேராசிரியர் ஒருவர் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினரான பேராசிரியர் ஜென்ரி குப்ராஸ்விலி கின்னஸ் சாதனைக்காக இவ்வாறு நீந்தியுள்ளார்.
ஒரு மணி நேரம் மற்றும் 32 நிமிடங்கள் அவர் நீந்தியது இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒப்பாகும் என இண்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
Comments
Story first published: Monday, January 29, 2001, 5:30 [IST]