கோலகலமாக நடந்த முருகன் கோவில் கும்பாபிஷேகம்
பெங்களூர்:
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அல்சூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் திங்கள் கிழமை காலை 9.50 மணிக்குசிறப்பான முறையில் நடந்தது.
அல்சூரில் பழைய மெட்ராஸ் சாலையில் அமைந்திருப்பது சுமார் 350 ஆண்டுகள்பழமையான ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். 1982-ம் ஆண்டுக்கு பிறகுதிங்கள்கிழமை (21.01.2001) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டது. திங்கள் கிழமை காலை 8.20மணிக்கு பூரணஆகுதி செய்யப்பட்டது. பூரண ஆகுதியில் ஹோமத்தீயில் காசுகள்போடப்பட்டன. அதன் பின் ஹோமகுண்டத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகம் செய்யும் அர்ச்சர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டது.
9.35 மணி அளவில் புனித நீர் கலசங்கள் யாக சாலையிலிலிருந்து கோவில் பிரகாரவலம் வந்து கும்பாபிஷேகம் செய்யப்படும் விமானங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
9.45 மணிக்கு முதலில் கிழக்கு மகா கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அதன் பின் மற்ற கோபுரங்களுக்கும், நிறைவாக முருகனின் விமானத்திற்கும்கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின்போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின்கோஷத்திற்குப் பின்னர் மூலஸ்தானத்தில் இருக்கும் சுப்ரமணிய சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக வைபவத்தில் ஆயிர்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications