8 மாதக் குழந்தை மீட்பு
பூஜ்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 8 மாதக் குழந்தை 81 மணிநேர மரணப் போராட்டத்துக்குப்பின் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
பூகம்பம் ஏற்பட்டதில் பல மாடிக்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பல இளம் குழந்தைகள் காயம் எதுவுமின்றி காப்பாற்றப்பட்டது. ஆனால் பிறந்துஎட்டு மாதமே ஆன மோர்தாஸ் அலி என்ற குழந்தை ஏறத்தாழ 80 மணிநேரப் போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டது.
பூஜ் டவுனில் உள்ள கோரா நூர் ஃபாலி என்ற இடத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையிலிருந்து இக்குழந்தை மீட்கப்பட்டது. பூகம்பம்ஏற்பட்டு 81 மணி நேரங்களுக்குப்பின் தனது தாயின் அருகே விழுந்து கிடந்த குழந்தை மோர்தாஸ் மீட்கப்பட்டது.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு இந்த 8 மாதக் குழந்தையை மீட்டனர். கட்டிட இடிபாடுகளை நீக்கிசடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறிய பூனை ஒன்று கத்துவது போல் அழுகுரல் கேட்டது.
உடனடியாக அவர் பிற வீரர்களையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்கு வந்தார். தேடும் பணியில் ஈடுபட்ட போது இளம் பிஞ்சுக்குழந்தை ஒன்றுஅழுது கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அக்குழந்தையின் தாயின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
அக்குழந்தையின் தாயின் அழுகிய சடலத்தை பூச்சிகள் மொய்த்திருந்தன. உடனடியாக அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட அக்குழந்தை மருத்துவமுகாமுக்குக்கொண்டு வரப்பட்டது. அக்குழந்தையில் வாயில் ரத்தகாயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் உடலில் ஒரு சிறிய காயம் கூட இல்லை.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications