நக்சல்கள் துப்பாக்கிச் சண்டை .. 5 பேர் கைது
தர்மபுரி :
தர்மபுரி அருகே போலீசாருக்கும் நக்சல் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைநடந்தது. இதில் நக்சல் கும்பலின் மற்றொரு தலைவன் பிடிபட்டான். 2 பெண்கள்உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக தர்மபுரியில் இயங்கி வரும் நக்சலைட் கும்பலைப் பிடிக்கபோலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மாறன் தலைமையில் இயங்கும் ஒரு கோஷ்டிக்கு அடுத்து , நக்சல் கும்பல் அமைப்பின்தலைவனாக காளிதாஸ் செயல்பட்டு வந்தார். இவர்கள் பதுங்கியிருப்பது குறித்ததகவல் போலீசாருக்குக் கிடைத்தது.
காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக் குட்டைப் பகுதியைப் போலீசார் சுற்றி வளைத்துசோதனையிட்டனர்.
அப்போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் நக்சல் கும்பலைச்சேர்ந்தவர்கள் சுடஆரம்பித்தனர். போலீசாரும் பதிலுக்கு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுபயமுறுத்தினர். பின்னர் அக் கும்பலைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில், காளிதாஸ், ஆனந்தி, பாலன், முருகன், சத்தியா ஆகியோர் கையில்ஆயுதங்களுடனும் பைப் வெடிகுண்டுகளுடனும் பிடிபட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள், நவீன கத்திகள்,பைப் வெடிகுண்டுகள், நக்சல் ஆதரவு பிரசுரங்கள், சங்கேத மொழியில் குறிக்கப்பட்டடைரி மற்றும் துணிகளைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, ரவீந்திரன்வாங்கிய துப்பாக்கி எனத் தெரிய வந்துள்ளது.
ரவீந்திரனின் சாவிற்குப் பிறகு நக்சல் கும்பலின் தலைவனாக காளிதாஸ் இருந்துவந்துள்ளான். இவர்களுக்கு உதவிய புரட்சிகர மாணவர் யூனியன், உழவர்உழைப்பாளர் அமைப்பாளர்கள் மற்றும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications