பூகம்பம் .. குவிகிறது நிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்துகணிசமான நிதி குவிந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், பல்லாயிரக்கணக்கானமக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துதவிக்கின்றனர்.

பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. சார்பில் ரூ 10லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.

இதுதவிர பாண்டிச்சேரியிலிருந்தும் கணிசமான அளவில் நிதி திரண்டு வருகிறது.பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம், தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்குவழங்கியுள்ளார்.

மேலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகம் முதல் தவணையாக ரூ. 15 லட்சம்பணத்தை நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது. இதேபோல, பாண்டிச்சேரியிலுள்ளஆங்கிலோ-பிரெஞ்சு டெக்ஸ்டைல் மில் நிறுவனம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ளதுணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பாண்டிச்சேரி தொழில் வர்த்தக சபை பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 1லட்சம்நன்கொடை வழங்கியுள்ளது. புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம்நடத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இது துவங்குகிறது. திருவள்ளூர் தேவஸ்தானம்ரூ. 2.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது.

இதுதவிர கர்நாடக அரசு மேலும் 2 டாக்டர்கள் குழுக்களை குஜராத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. அதுதவிர ரூ. 22 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களையும்அது கொடுத்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+