உணவுக்காக அலையும் மக்கள்
அகமதாபாத்:
குடியரசு தினத்தன்று குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்த மக்கள் உணவுப் பொட்டலங்களுக்காகத்தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூஜ், ரபார், அஞ்சார், பச்சாவ் மற்றும் கட்ச் மாவட்டத்தின் கிராமப் புறங்களுக்கு நிவாரணப்பொருட்களும், உணவுப் பொட்டலங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு, பசிக்கொடுமையிலும், தாகத்திலும்வாடி வரும் மக்கள், தனியார் மற்றும் பொதுத்துறை பொருட்களை சேதப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உணவுப் பாருட்களை ஏற்றிக் கொண்டு வரும் டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் முண்டியடித்துக் கொண்டு சென்று அவர்களிடமிருந்து உணவுப் பாட்டலங்களைப்பெற்று வருகின்றனர். தலைநகர் காந்திநகரில் உள்ள குஜராத் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலத்திலுள்ள நிர்வாக அதிகாரிகள் அனைவரும் கட்ச்பகுதியில் முகாமிட்டுள்ளனர் என்றனர்.
இதற்கிடையே குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பூகம்பம் ஏற்படலாம் என்ற நடுக்கத்தில் உள்ளனர். யாரும் அலுவலகங்கள் இயங்கி வரும்கட்டிடங்களுக்குச் செல்லவில்லை. மாறாக அனைவரும் திறந்தவெளியில் முகாமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாநில அரசு ஊழியர்கள் பயமின்றி தங்கள் பணிகளுக்குச் செல்லலாம் என்று மாநில முதல்வர் கேசுபாய் படேல் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும் சனி மற்றும் ஞாயிறுகளில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அரசுஊழியர்களோ பெயருக்கு அலுவலகத்துக்கு வந்து கையெழுத்திட்டு விட்டு அலுவலகத்தை விட்டு திரும்பி விட்டனர்.
இதையடுத்து பொது நிர்வாகத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள நோட்டீஸில், முதல்வர் உத்தரவை மீறி யாரும் வேலைக்கு வராமல் இருந்தால் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேலைக்கு வராத அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications