கோர்ட்டில் பார்க்கலாம் .. அஸாருக்கு ஏ.சி.முத்தையா பதில்
பெங்களூர்:
அஸாருதீன் குற்றச்சாட்டுக்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நீதிமன்றத்தில் தகுந்த பதிலளிக்கும் என அதன் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித்தார்.
பெங்களூரில் இந்திய கிரிக்கெட்டிற்கான கிரிக்கெட் சாப்ட்வேர் ஒன்றைத் தொடங்கி வைத்தபின் நிருபர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட் ஊழல் குறித்துவிசாரிப்பதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் மாதவனை நியமித்தது சரியான முடிவுதான் என்றார்.
அஸாருதீன் கோரியபடி கவாஸ்கர், டெண்டுல்கர்,சாஸ்திரி போன்றோர் மீது விசாரணை நடத்த இயலாது, ஏனெனில், சி.பி.ஐ. அளித்த அறிக்கையில் இது பற்றிகூறப்படவில்லை . தனிப்பட்ட முறையில் எவர் மீதும் விரோதம் இல்லை.
வாரியத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றம் சென்றதால் நீதிமன்றத்தில் வாரியம் தகுந்த பதிலளிக்கும் என்ற அவர் அதற்கு மேல் பதிலளிக்கமறுத்துவிட்டார்.
இதனிடையே, இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பரோடாவில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி குஜராத்தில் நிகழ்ந்தபூகம்பத்தினால் நாக்பூருக்கு மாற்றப்பட உள்ளது என்று கிரிக்கெட் வாரியச் செயலர் லீலே அறிவித்தார். இது பற்றிய முடிவு வாரியத் தலைவருடன் கலந்துபேசி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குஜராத் பூகம்பத்தை அடுத்து இந்தியா-இங்கிலாந்துக்கிடையே 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியும் குஜராத்திலிருந்துமாற்றப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications