விவசாயிகளுக்கு துரோகம் .. கண்டிக்கிறது பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ஹெக்டேருக்கு 300ரூபாய் இழப்பீடு மிகவும் குறைவு என புதுவை பா.ஜ.க தலைவர்கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மத்திய அரசிடமிருந்து போதிய புயல் நிவாரண நிதியைக் கோரிப் பெறப்படவில்லை என்ற அவர் காரைக்கால் விஸ்வநாதர் கோவில் நிலங்களை தனியாருக்குவிற்கும் அரசின் முடிவால் தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்றார்.
அடுத்த மாதம் புதுவை பா.ஜ.கா.குழு பிரதமரையும் உள்துறை மந்திரியையும் சந்தித்து புதுவைப்பிரதேச தியாகிகள் மற்றும் காவல்துறையினரின்பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
புதுவை பா.ஜ.க. சார்பில் குஜராத் பூகம்ப நிவாரணப் பொருட்களும், பூகம்ப நிவாரண நிதியும் சேகரித்து அங்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications