இங்கிலாந்து அலுவலகம் மீது குண்டுவீச்சு
கொழும்பு:
இலங்கையில் உள்ள இங்கிலாந்தின் அரசு சாரா அமைப்பு அலுவலகத்தின் மீது, புதன்கிழமை கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகர் கொழும்பு பூங்கா சாலையில் அமைந்திருக்கும் இங்கிலாந்தின் அரசு சாரா அமைப்பான ஆக்ஸ்பான் அலுவலகத்தின் மீது கை எறி குண்டு வீசிதாக்குதல் நடத்தப்பட்டது என ஆக்ஸ்பாமின் ஒருங்கிணைப்பாளர் சிமன் ஹாரிஸ் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. சில ஜன்னல்கள் மட்டும் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதுதெரியவரவில்லை.
தற்போது ஆக்ஸ்பாம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் நார்வேயால் குழந்தைகளை காப்போம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் அலுவலகம் மீதுகடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதப்ை போல் உள்ளது. இந்த தாக்குதலிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஒரு வாகனம் மட்டுமேசேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே தூதர் எரிக் சோல்ஹேம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் புதன்கிழமை மீண்டும் இலங்கை வருவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்பாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எரிக்கின் வருகைக்கும் தொடர்பிருக்குமா என்பது தெரியவில்லை.
இந்த தாக்குதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு 2 மாத சுற்றுப்பயணமாக வந்துள்ள போது நடந்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிஇலங்கையில் இரண்டு மாத சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் விடுதலை புலி அமைப்பு லண்டனைத் தலைமையிடமாகக் கொணடு செயல்பட்டு வருகிறது. இதை தடை செய்யஇலங்கை அரசு அந்நாட்டைகேட்டுக் கொண்டுள்ளது. இந்த தடை பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்ததாக்குதல் இங்கிலாந்திற்கு எச்சரிக்கையாக நடத்தப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது.
இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகள், இலங்கை தமிழர் பிரச்சனையில் அயல் நாட்டவர் ஈடுபடுவதை தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications