கன்னத்தில் பளார் பளார்... கலாட்டா கவுன்சிலர்கள்
கோவை:
கோவை மாநகராட்சியில் இரண்டு பெண் கவுன்சிலர்கள், மேயர் முன்னிலையில் மாநகராட்சிக் கூட்டம் நடக்கும்மன்றத்திலேயே, கன்னத்தில் அறைந்து கொண்டு கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.
கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் புதன்கிழமை நடந்தது. இந்தக்கூட்டம் துவங்கியவுடன் கோவை மேயர் கோபாலகிருஷ்ணன், முதலில் தீண்டாமை உறுதி மொழி எடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.
இதையடுத்து தீண்டமை உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஹேமாஜெயசீலன் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தார். தீண்டாமை உறுதி மொழியை வாசிக்கும் கோவை மேயர், அந்தமக்கள் வாழும் பின் தங்கியப் பகுதிகளில் எவ்வித வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளவில்லை, மேலும்,கான்டிராக்ட் வேலைகளை மாநகராட்சி உறுப்பினர்கள், நேரடியாகவோ மறைகமாகவோ செய்யக் கூடாது எனவிதியில் உள்ளது.
இதையும் மீறி 3 கவுன்சிலர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவ்வாறுசெய்யவில்லை என்றால், மேயரே ராஜினமா செய்ய வேண்டும். பதவிக்கே மேயர் லாயக்கில்லை என்றுகுற்றம்சாட்டினார்.
அப்போது அங்கு ஆவேசத்துடன் எழுந்த 29 வது வார்டு உறுப்பினர் லட்சுமி, வேகமாக எழுந்து வந்து ஹேமாஜெயசீலன் கன்னத்தில் அடித்தார். இதையடுத்து பதிலுக்கு ஹேமா ஜெயசீலனும் அறைந்தார். இதனால் அவையில்திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் மாநில காங்கிரசைச் சேர்ந்த பலர் அங்கு கூடினர். அதற்குள் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் இதனால் செய்வதறியாது திகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் உறுப்பினர்கள் தலையிட்டு சமாதானத்தில் ஈடுபட்டனர். கூட்டம் அமைதியானதும், ஹேமா ஜெயசீலனைஅடுத்த 3 கூட்டங்களுக்கு வரக் கூடாது எனக் கூறி மன்றத்திலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர் வசந்தியும் வெளிநடப்புச் செய்தார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications