இளங்கோவனுக்கு எதிராக கோர்ட்டில் மனு
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இளங்கோவன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நாசரத்பேட்டைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சென்னைநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பினேன். தலைவர்பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறும் என்றும், நவம்பர் மாதம்8-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலை அனுப்பும்படியும், தேர்தலில் போட்டியிட விண்ணப்பம்கேட்டும் மாநில, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்அனுப்பி வைத்தேன்.
நவம்பர் 8-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய மாநில தலைமை அலுவலகத்திற்குசென்றேன். ஆனால் அங்கு மாநில தேர்தல் அதிகாரி வரவில்லை. அங்குஇருந்தவர்களும் என் வேட்பு மனுவை ஏற்க மறுத்து விட்டனர்.
மாலை 5 மணி வரை காத்திருந்து விட்டு அறிவுப்பு பலகையிலும், கதவிலும் என்வேட்பு மனுவை ஒட்டினேன். அப்போது நான் இளங்கோவன் ஆதரவாளர்களால்தாக்கப்பட்டு காயமடைந்தேன்.
நான் ஒருவன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் என்னை தலைவராகஅறிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். இந்நிலையில்இளங்கோவனே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என அகில இந்தியபொதுச்செயலாளர் அறிவித்தார்,
இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது. சட்ட விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகள்தவறி விட்டனர். எனவே தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக செயல்படஇளங்கோவனுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், இந்த மனுவுக்கு ஒரு வாரத்திற்குள்பதிலளிக்க வேண்டும் என இளங்கோவனுக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி தேர்தல்அதிகாரிகள், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் அதிகாரிகள், அகில இந்தியபொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டிருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications