தொற்றுநோய் பரவும் அபாயம்
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படலாம் என்று பூகோள ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியிலுள்ள இந்திய பூகோள ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்திற்குப்பின் 110முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. 6.9 ரிக்டர் பதிவான பூகம்பத்திற்குப் பின் 3 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பூஜ், அகமதாபாத், அஞ்சார், ராஜ்கோட் பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானசடலங்கள் இடிபாடுகளுக்கிடையிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன.
மேலும் கட்டிட இடுபாடுகள், உணவு கிடைக்காத நிலை, மன நெருக்கடி, சடலங்களுக்கிடையிலிருந்து மீட்கப்பட்ட நிலை ஆகியவற்றால்உயிரிழந்தவர்களுக்கு பிளேக், காலரா போன்ற பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று பூகோளஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் ஒரு பக்கம் பூகம்ப பாதிப்பு ஏற்பட்டு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னொருபுறம் செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமை காலையும் 3.3. என்ற ரிக்டர் அளவிலும், 4.7 ரிக்டர் அளவிலும் பூகம்பம் ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications