பூகம்ப நிவாரணக் கமிஷன்
பெங்களூர்:
தேசிய இயற்கை சீற்ற நிவாரண கமிஷன் ஒன்றை உடனடியாக பிரதமர் வாஜ்பாய் அமைத்து குஜராத் பூகம்பத்திற்குஉதவ வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவ கெளடா புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரிசாவில் புயல் ஏற்பட்ட போதே இயற்கைச் சீற்றநிவாரணக் கமிஷன் அமைக்குமாறு பிரதமரை வலியுறுத்தினேன். இப்போதும் அதேபோல் இயற்கை சீற்றநிவாரணக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஆனால் யாரும் இதுபோல் நிவாரணக் கமிஷன் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இன்னமும்புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவில்லை.
மத்தியிலுள்ள மூத்த அமைச்சர்கள், முக்கியப் பொறுப்புக்களில் இருப்பவர்கள் மற்றம் சுகாதாரத்துறை அதிகாரிகள்ஆகியோர் குஜராத் சென்று நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட வேண்டும். நிவாரணப்பணிகள் முடியும் வரைஅவர்கள் குஜராத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்துவருவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பிப்ரவரி 3 ம் தேதி குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறேன்.பிப்ரவரி மாதம் 2 ம் தேதி மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டு குஜராத் பூகம்ப நிதிவசூல் செய்யப்படும். இந்தப் பணம் பிரதமர் நிவாரண உதவி அல்லது முதல்வர் நிவாரண உதவி திட்டத்தின் கீழ்குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் கெளடா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications