அஸார் வழக்கு .. கிரிக்கெட் வாரியத்திற்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
இந்திய கிரிக்கெட் வாரியம், வாரியத் தலைவர், மற்றும் விசாரணை அதிகாரி மாதவன் ஆகியோருக்கு, ஹைதராபாத் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் இந்தியகிரிக்கெட் அணித் தலைவர் அஸாருதீன், தனக்கு ஆயுள் காலத்தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஊழல் தொடர்பான விசாரணை சரிவர நடைபெறவில்லை, மற்றம் விசாரணை அதிகாரியாக மாதவனை நியமித்தது தவறு என்ற அஸாருதீனின்குற்றச்சாட்டிற்கு கிரிக்கெட் வாரியம், வாரியத்தலைவர் ஏ.சி.முத்தையா மற்றும் விசாரணை அதிகாரி மாதவன் ஆகியோர் வரும் பிப்ரவரி 14ம்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications