அகமதாபாத்திற்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக உ.பி. மாநிலம் அலகாபாத் நகரிலிருந்து அகமதாபாத்துக்கு சிறப்புரயில்கள் விடப்படும் என்று வடக்கு ரயில்வே புதன்கிழமை தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 9 பெட்டிகள், இரண்டாம் வகுப்புபொதுப்பெட்டி ஆகியவை உள்ளன. இந்த ரயில் மாலை 5 மணிக்கு அலகாபாத்திலிருந்து ஜபல்பூர் வழியாக அகமதாபாத் செல்லும்.
மேலும் டெல்லி - அகமதாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதி கொண்ட கூடுதல் பெட்டிகளை இணைக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications