கர்நாடக அமைச்சரின் "அறிவுப் பேச்சு
பெங்களூர்:
பூகம்பத்தால் குஜராத் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், உயிருடன் மீண்டவர்கள் மனம் நோகும் விதத்தில்கர்நாடக அமைச்சர் ஒருவர் சில கருத்துக்கள்ை தெரிவித்துள்ளார்.
கர்நாடக போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் டி.ஜான். குஜராத் பூகம்பம் குறித்து ஜான் தெரிவித்துள்ளகருத்துக்கள் கர்நாடகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை மக்களையும்படிக்காதவர்களாக வைத்திருந்த காரணத்தாலேயே கடவுள் குஜராத் மக்களை பூகம்பம் மூலம் தண்டித்துள்ளார்என்று ஜான் கூறியுள்ளார்.
உலக சமாதான தினத்தையொட்டி கன்னட தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்தபேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார் ஜான். அவர் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பம், கடவுள்கொடுத்துள்ள தண்டனையாகும். கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை மக்களையும் அம்மாநிலத்தில்கொடுமைப்படுத்தியதால் கடவுள் இந்த தண்டனையைக் கொடுத்துள்ளார்.
குஜராத்தில் சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. எங்களது (கிறிஸ்தவ) மதத்தினர் தாக்கப்பட்டனர். இந்தக்கொடுமைக்குத்தான் கடவுள் இப்போது தண்டனை கொடுத்துள்ளார் என்று பேசினார் ஜான்.
அமைச்சர் ஜானின் இந்தக் கருத்துக்கு கர்நாடக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உடனடியாக ஜான் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் எதியூரப்பா, சுரேஷ் குமார், ராமச்சந்திர கெளட, ராமதாஸ் ஆகியோர் முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசியல் சட்டம் 153(ஏ)வை ஜான் மீறி விட்டார். மதக்கலவரத்திற்கு வித்திடும் வகையில் அவரது பேட்டி அமைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் மகாத்மா காந்தி சிலை அருகே பா.ஜ.க. தரப்பில்போராட்டமும் நடத்தப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications