நிதிக்கு ஏங்கும் நாகூர்-காரைக்கால் ரயில் பணி
சென்னை:
மத்திய அரசு நிதி ஒதுக்கியவுடன் நாகூர் - காரைக்கால் ரயில் பாதைக்கான பணிகள்தொடங்கும் என தென்னக ரயில்வே கூறியுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.குத்தாலம் கல்யாணம், நாகூர்- காரைக்கால் இடையே புதிய ரயில் பாதை போடும் பணிதொடங்க இருப்பது பற்றி மாநில அரசுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்முடி தன் பதிலில் கூறியதாவது:
சென்ற 95-96-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே நிதிநிலை அறிக்கையில்திருச்சி - தஞ்சாவூர்- காரைக்கால் அகல ரயில்பாதை திட்டம் இணைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் முதல் காரைக்கால் வரை புதிய ரயில்பாதை அமைக்கப்படவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை ரயில்வேவாரியம் ஒதுக்கிய பின் பணிகள் தொடங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதுஎன கூறினார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications