சட்டசபையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
சென்னை:
ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தராததைக் காரணம் காட்டி அ.தி.மு.க உறுப்பினர்கள் புதன்கிழமை சட்டசபையிலிருந்து வெளிநடப்புச்செய்தனர்.
சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும், அ.தி.மு.க சட்டசபைத் தலைவர் சுந்தரம் எழுந்து நின்று, தான் ஏற்கனவே கொடுத்திருந்த ஒத்திவைப்புத் தீர்மானம்என்னவாயிற்று என்று கேட்டார்.
அப்போது சபாநாயகர் பழனிவேல்ராஜன், ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு சுந்தரத்துக்கு உரிமை இல்லை. அவர் இதுகுறித்துக்கேட்க வேண்டுமானால் எனது அறையில் வந்து கேட்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் எனது அறையில் வந்து கேள்வி எழுப்பலாம்என்றார்.
ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சுந்தரம், தனக்குப் பேச அனுமதி தர வேண்டும் என்று கேட்டார். அப்போது சபாநாயகர், அ.தி.மு.கஉறுப்பினர் விஸ்வநாதன் கூறியுள்ள ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதிக்கவிருப்பதால் இப்போது ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அனுமதிவழங்க முடியாது என்றார்.
இதை ஏற்காத சுந்தரம், தாமரைக்கனி உள்பட மூன்று அ.தி.மு.க.உறுப்பினர்களுடன் சபையை விட்டு வெளியேறினார்.
இதேபோல, மேலும் இடைக்கால பட்ஜெட் குறித்து நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய பார்வர்டு பிளாக் உறுப்பினர் சந்தானம்,துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி தனக்கு பேச அதிக நேரம் அளிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி சட்ட சபையை விட்டு வெளியேறினார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications