முற்றுகையில் அத்வானி
காந்திதாம் (குஜராத்):
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வந்து சேரவில்லை என்று காந்திதாம் மக்கள் மத்திய உள்துறை அமைச்சர்அத்வானியிடம் புதன்கிழமை புகார் செய்தனர்.
குஜராத்தில் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பூகம்பத்தில் பூஜ், அகமதாபாத், ராஜ்கோர், காந்திதாம், பச்சாவ், அஞ்சார் மற்றும் பல இடங்கள்உருத்தெரியாமல் சிதைந்து போயின.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான காந்திதாம் நகரைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ்குமார்மற்றும் குஜராத் மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பரமானந்த சத்தார் ஆகியோர் புதன்கிழமை சென்றனர்.
அப்போது காந்திதாம் மக்கள் மத்திய அமைச்சர் அத்வானியைச் சூழ்ந்து கொண்டு, எங்கள் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வரவில்லை.மாவட்டக் கலெக்டரோ அல்லது போலீஸ் அதிகாரிகளோ யாரும் வரவில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இல்லாமல்தவிக்கிறோம் என்றனர்.
இதையடுத்து அத்வானி, முதலில் காந்திதாம் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள் என்று உத்தரவிட்டார்.
பின்னர் அத்வானி அங்கிருந்து பச்சாவ் நகருக்குச் சென்றார். அங்கு அத்வானியைச் சூழ்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள், பூகம்பத்தில் பாதிக்கப்பட்டஎங்களிடம் எஞ்சியிருப்பது சொற்ப அளவு பொருட்கள்தான். அதையும் இங்கு வரும் கொள்ளையர்கள் எங்களைத் தாக்கி விட்டு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்த நகரை ராணுவத்திடம் ஒப்படையுங்கள் என்று கேட்டுக் கொண்டர்.
அவர்களிடம் அத்வானி, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களைஅளிக்கவும் மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications