உலகக் கோப்பை ஹாக்கி: ஏ பிரிவில் இந்தியா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் ஜூலை 17-ம் தேதி துவங்கும் உலகக் கோப்பை ஹாக்கி தகுதிப் போட்டியில்,சாதாரண அணிகள் இடம் பெற்றுள்ள பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
இந்தப் போட்டி ஜூலை 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் எகிப்து, அமெரிக்கா, வேல்ஸ் ஆகியஅணிகளுடன் இந்தியா ஒரு பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது நினைவிருக்கலாம்.
இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன் இதுகுறித்துக் கூறுகையில், மொத்தம் 16 அணிகள் உலகக்கோப்பைப் போட்டியில் கலந்து கொள்கின்றன என்றார்.
பிரிவுகள் வருமாறு:
குரூப் ஏ: எகிப்து, இந்தியா, அமெரிக்கா, வேல்ஸ்.
குரூப் பி: அர்ஜென்டினா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரான்ஸ்.
குரூப் சி: சிலி, ஜப்பான், ஸ்காட்லாந்து, ஸ்பெயின்.
குரூப் டி: கனடா, போலந்து, ரஷியா, ஜிம்பாப்வே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications